தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அமச்சுப்பதவி இல்லை!

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்மார் பதவியேற்கும் நிகழ்வில் முஸ்லிம் அல்லது தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் எந்த பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக பெண் அரசியல்வாதிகள் எவருக்கும் இந்த பட்டியலில் இடமளிக்கப்படவில்லை குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது.
முன்னதாக வியாழேந்திரன் – அங்கஜன் ,பைசர் முஸ்தபா ஆகியோருக்கு இராஜாங்க அல்லது பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படலாமென சொல்லப்பட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.