கண்ணீரில் மூழ்கியது யாழ்  உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்….!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் நூற்றுக்கணக்கான. மாவீரர்களது பெற்றோர் உறவுகள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 6:05 நிமிடத்திற்கு பொதுச் ஈகை சுடரினை  மணல்காடு குடத்தனையை சேர்ந்த இரண்டு மாவீரர்களான. லெப் கேணல் கவியழகி வீரவேங்கை கவியரசி ஆகியோரது தாயாரான  திருமதி பேதுறுப்பிள்ளை  அன்னை மேரி கற்புரோஜா அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து ஏனைய மாவீரர்களது பெற்றோர்கள் உறவுகள் கண்ணீர் மல்க தமது உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.இதில் பலநூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டனர்