யாழ் பல்கலையில் எந்தவொரு நிகழ்வும் நடத்ததடை!

இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமி அறிக்கை ஊடாக உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அனைத்துப் பீட மாணவர் சங்கங்களுக்கும் இன்று (26) அனுப்பப்பட்ட குறித்த அறிக்கையில்,
பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் – எனக் கூறப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது