யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய அனைத்து பீட மாணவர்களுக்கும் தடை!

28ம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய அனைத்து பீட மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்றும் நாளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
எனினும் அதனை மாணவர்கள் பொருட்படுத்தாத நிலையிலேயே கடுமையான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி க.கந்தசாமி தனது இரண்டாவது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.