இலங்கையில் இரு தேசம்: – வலியுறுத்தியது கொன்சர்வேற்றிவ் கட்சி

பழமைவாதக் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரு சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மேலும் சைப்பிரஸ் மற்றும் பலஸ்தீனியத்துடன் ஒப்பிட்டு இலங்கையில் இரு தேசக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொன்சர்வேற்றிவ் கட்சியின் பிரித்தானியத் தமிழர்களுக்கான செய்தித் தொடர்பாளர் இது பற்றிப் பேசுகையில், “இலங்கையைப் பலஸ்தீனத்துடன் ஒப்பிடுவதன் மூலம் கட்சி மேலிடம் இவ்விடயத்தில் தாம் கொண்டுள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களுக்கு நீதி வழங்காது பின்னடித்தாலோ அல்லது தமிழர் அபிலாசைகளுக்கு ஏற்ற தீர்வு ஒன்றை வழங்க மறுத்தாலோ, சர்வதேசம் இரு தேசக் கோட்பாட்டை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிட்டார்