இன்றைய ராசி பலன் 27/11/2019

மேஷம்
எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக் குறியாகும்

ரிஷபம்
வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்னையா பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்
இன்று, உங்கள் நீண்ட நாள் நண்பரைச் சந்திந்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும்.

கன்னி
இன்று, தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு.

மகரம்
தனலாபமும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். கல்வியில் வெற்றி உண்டு. பெண்களால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

கடகம்
இன்று, உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த பிராயாசைப் பட நேரும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும். பயணங்களில் தடைகள் ஏற்படலாம்.

சிம்மம்
இன்று, நன்கு பழகியவர்களே மோசம் செய்வர் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கவேண்டிய நாள். காரியத் தடைகளால் ஆர்வம் குறையும்.

துலாம்
தன்னம்பிக்கை குறையும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தாரிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கவனமாகப் படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம்.

மீனம்
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமின்றிக் கிடைக்கும். புனிதப் பயணங்கள் மனமகிழ்ச்சி தரும். மனைவியின் செயல்பாடுகள் குடும்பத்தாரிடையே ஒற்றுமையை அதிகரிக்கும்.

தனுசு
பெண்களால் பண விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.

விருச்சிகம்
இன்று, வாகன யோகம் உண்டு. இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.

கும்பம்
இன்று, தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும். அதிகாரிகள் தொழில் விரிவாக்கத்துக்குத் துணைபுரிவர். அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலமும் ஏற்படும்.