வடக்கு ஆளுனராக மீண்டும் சுரேன் ராகவன்???

வடக்கு ஆளுனராக சுரேன் ராகவனே மீண்டும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அல்லது நாளை புதிய ஆளுனர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
வடக்கு ஆளுனர் யார் என்பது தொடர்பாக நீண்ட விவாதம் அரசிற்குள்ளும், ஊடகப்பரப்பிலும் தொடர்ந்து நிலவிவரும் நிலையில், அரசின் பிந்தைய முடிவின்படி சுரேன் ராகவனிற்கே அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுரேன் ராகவனை ஆளுனராக நியமிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை எமது ஊடகம் முதலில் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
அத்தடன் இப்பதவி முன்னாள் வடக்கு ஆளுனரான சுரேன் ராகவனிற்கு அதிகளவு சாத்தியப்படுவது குறைவு எனக் கூறும் கொழும்புச் செய்திகள், முன்னாள் சம்பிரகமுவ மாகாண ஆளுனர் மைத்திரி குணரெட்னவை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஆளுனர் போட்டியில் முன்னாள் சம்பிரகமுவ மாகாண ஆளுனர் மைத்திரி குணரெட்ன முன்னணியில் இருப்பதாக ஜனாதிபதி செயலக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் வடக்கு ஆளுனரான சுரேன் ராகவன் தேர்தல் காலங்களில் ஒதுங்கி இருந்த குற்றச்சாட்டு பொது ஜன பெரமுன கட்சி வட்டாரத்தில் அதிகளவாக விவாதிக்கப் படுவதால் ஆளுனர் பதவி சிக்கல் நிலையை எதிர் நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.