குளத்தில் இறங்கிய மூவர் மரணம்….!

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் இறங்கிய 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
5 பேர் மீன்பிடிக்க சென்ற நிலையில் அதில் மூவர் தவறி குளத்திற்குள் விழுந்து காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் குளத்தில் இருந்த சகதியில் புதையுண்டு இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், பொதுமக்கள், மற்றும் இராணுவத்தினர் இணைந்து இளைஞர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர்களின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்படுள்ளதாக தெரிய வருகின்றது.
சுரேஷ்குமார் தர்சன் (20), யதுர்சன் (19), கே.திவாகரன் 19 ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தர்சன் கடந்த ஆறு மாதங்களின் முன்னரே திருமணம் செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இளைஞர்களின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.