இன்றுமுதல் ஓமானில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை….!

ஓமானின் மஸ்கட்டில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை இன்று சலாம் எயார் விமான சேவை ஆரம்பித்துள்ளது.அந்தவகையில் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கபிதான் மொஹமட் அஹமட் செலுத்தி வந்த விமானத்தில் 86 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விமான சேவை வாரத்தில் திங்கள், புதன், வௌ்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 8.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து செயல்படும் அதேவேளை, அதே தினங்களில் ஓமானில் இருந்தும் காலை 9.10 மணிக்கும் பயணத்தை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது