இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை மறு நாள்….!

இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை மறு நாள் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.எதிர்வரும் பொதுத்தேர்தல் வரையான இடைக்கால அரசாங்கத்தை அண்மையில் கோட்டாபய நியமித்தார். இதில் 15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.
இராஜாங்க அமைச்சர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
இதேவேளை, இலங்கை நிர்வாகசேவையின் மூத்த அதிகாரியான சிறிசேன அமரசேகர இன்று காலை 10:40 மணி சுப நேரத்தில் அமைச்சரவை செயலாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.