ஸ்ரீகாந்தாவையும் இடைநிறுத்தியது ரெலோ

ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமாகச் செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, மற்றும் ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜனார்த்தன் ஆகிய கட்சிப் பிரமுகர்களும் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

 

கட்சி விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் உபதலைவரும், பதில் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் திருகோணமலையில் நேற்று கூடிய கட்சியின் தலைமைக்குழு ஏகமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை, மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடாத்துவதற்காக மூவரைக் கொண்ட விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.