தமிழ், முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்குமாறு பிரதமருக்கு ராமஞ்ச பீடாதிபதி அறிவுரை

சிங்கள பெளத்த பெரும்பான்மை ஆதரவில் ஆட்சி அமைத்தாலும் தமிழ் முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு பயணிக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ராமஞ்ச பீடாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை தலதாமாளிகை வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில்  ராமஞ்ச பீட வழிபாட்டிலும் ஈடுபட்டார். இதன்போதே பிரதமருக்கு ராமஞ்ச பீடாதிபதி நாபான்னே பேமசிறி தேரர் இந்த அறிவுரைகளை வழங்கினார்.

தமிழர், முஸ்லிம்கள் என தனித்து பார்க்காது அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் செயற்பட அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை அவர்களிடம் கொண்டு சேரக்க வேண்டும். உண்மையில் இப்போது தான் நல்லாட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக உணர முடிகின்றது.

ஆகவே நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்ற ஆட்சி ஒன்று உருவாக்க நீங்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறினார்.