விக்கி தலை­மையில் மாற்று அணி: கலந்­து­ரை­யா­டல்­களில் புத்­தி­ஜீ­விகள் தரப்பு

தமிழ்த் தேசியப் பரப்பில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் நீதி­ய­ரசர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் மாற்று கூட்­ட­ணி­யொன்றை அமைத்து பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய பூர்வாங்க கலந்­து­ரை­யா­டல்­களில் புத்­தி­ஜீ­விகள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்­டங்­களைச் சேர்ந்த புத்­தி­ஜீ­விகள் குழு­வொன்று இவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பித்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்தப் புத்­தி­ஜீ­விகள் குழு­வினர் அடுத்­து­வரும் நாட்­களில் சம­யத்­த­லை­வர்கள், பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், சிவில் தரப்­பினர் மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஆகி­யோரை ஒருங்­கி­ணைத்து கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

அத­னை­ய­டுத்து தமிழ் மக்கள் கூட்­டணி, ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, ஈழத்­த­மிழர் சுயாட்­சிக்­க­ழகம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ரெலோவில் முரண்­பா­டுகள் கார­ண­மாக மாற்­று­நி­லைப்­பா­டு­களைக் கொண்­டி­ருக்கும் சட்­டத்­த­ரணி ஸ்ரீகாந்தா தலை­மை­யி­லான அணி­யினர் ஆகிய தரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக நடை­பெற்று நிறை­வ­டைந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஒருங்­கி­ணைப்பில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்­சிகள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு 13அம்­சக்­கோ­ரிக்­கைகள் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் அதனை மையப்­ப­டுத்தி அடுத்­த­கட்டச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடி­யாது போயி­ருந்­தது.

அத்­துடன், ஐந்து கட்­சி­களும்  தனித்­த­னி­யாக தத்­த­மது தீர்­மா­னங்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­மையால் கூட்­டி­ணைந்து செயற்­பட முடி­யாத சூழலும் ஏற்­பட்­டி­ருந்­தது. மேலும், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு சொற்­ப­கா­லமே இருந்­த­மையால் ஐந்து கட்­சி­களை இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தொடர்ச்­சி­யாக முன்­ன­கர்த்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள முடி­யாதும் போயி­ருந்­தது.

இந்­நி­லையில் ,எதிர்­வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைப்­ப­தற்கு ஏது­வான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்ற நிலையில் ,தமிழ்க் கட்­சி­களை ஒருங்­கி­ணைக்கும் செயற்­பா­டு­களை வேளை­யுடன் ஆரம்­பித்­துள்­ள­தாக அச்­செ­யற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள புத்­தி­ஜீ­விகள் குழு­வினைச் சேர்ந்த முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை, தமிழ் மக்கள் கூட்­ட­ணிக்கும், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடுதலை முன்னணிக்கும் இடையில் பொதுத்தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் கொள்கைரீதியான உடன்பாட்டினைக் கொண்ட கட்சிகள் புதிய கூட்டில் இணைந்துகொள்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லையென்றும் அக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.