இராஜாங்க அமைச்சர்களாக அங்கஜன், மற்றும் வியாழேந்திரன் நியமனம்?

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ,மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், இராஜாங்கஅமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென தகவல்கள்வெளியாகியுள்ளது.
நாளை மறுதினம் திங்கட்கிழமை 25 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால்நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு,யாழ் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்றஉறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்கஅமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றை  முன்தினம் 25 பேரைக்கொண்ட அமைச்சர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்ட நிலையில், அதில், ஆறுமுகன்தொண்டமான் மற்றும் டக்லஸ் தேவானத்ந்தா ஆகியோர் அமைச்சர்களார் நியமிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.