இன்றைய ராசி பலன் 24/11/2019 ஞாயிற்றுக் கிழமை.

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்துசேரும். பிரியமான நண்பர்கள் நீங்கள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகிச்செல்லும். இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவே கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத மாற்றங்கள் வரக்கூடும். இன்று மாணவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது. இன்று மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் திரு அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லும் நாள்.
இந்த அற்புதமான நாளை பயன்படுத்தி நாமும் குபேரருடன் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. ஏழு தலைமுறைக்கும் நமக்கு செல்வம் செழிப்பாக இருக்கும். கிரிவலம் செல்ல முடியாத நண்பர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 :30 மணிக்குள் குபேரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மற்றும் சிவபெருமானையும் மனதார வணங்குங்கள். ஏழு தலைமுறைக்கு உங்களுக்கு செல்வம் செழிப்பாக இருக்க வேண்டும். இந்த நாளை நீங்கள் மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை எடுப்பீர்கள். வியாபார விரோதம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உறவினர்கள் நண்பர்களிடம் மிக கவனமாக பழகுவது நல்லது. இன்று சிற்றின்ப செலவு ஏற்படும். மனதில் ஏதாவது கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கிச் சென்றாலும் வழியே வந்து சிலர் சண்டை போடக் கூடும்.
ஆகையால் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. இன்று முயற்சிகளின் பேரில் சில முக்கிய பணிகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. கூடுமானவரை இன்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நேரம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள்.
குபேரர் பூமிக்கு வந்து திரு அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்வார். அவர் செல்லும் பொழுது நாமும் குபேரரை தரிசித்து விட்டு கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கும் நமக்கு செல்வம் இருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் நாம் குபேரரரையும் திரு அண்ணாமலையாரையும் தரிசித்துவிட்டு கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 க்குள் குபேரரை வணங்கி பின்னர் சிவபெருமானை வழங்குவது மிகவும் சிறப்பு. உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் செல்வ யோகமும் ஏற்படும். தயவுசெய்து இன்றைய நாளை நீங்கள் தவற விடாமல் இந்த பணியை செய்யுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர் களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். அஞ்சல் வழியில் அனுகூல செய்திகள் வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காண்பீர்கள். இன்று உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் செல்லும். நெருங்கிய நண்பரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பேச்சில் நிதானம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும்.
குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்கும். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்வார்.
இந்த கிரிவலத்துடன் நாமும் சென்றால் ஏழு தலைமுறைக்கு நமக்கு செல்வச் செழிப்பு இருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அண்ணாமலையாரையும் குபேரரையும் நாமும் தரிசித்து விட்டு கிரிவலம் மேற்கொண்டு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். தயவு செய்து இந்த நாளை மட்டும் நீங்கள் தவற விடாதீர்கள். அதுபோலவே கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6: 30க்குள் குபேரரையும் சிவபெருமானையும் வழிபட்டு செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதிர்காலம் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பிரியமானவர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும்போது சற்று மன மகிழ்ச்சி குறையும்படியான சூழல் உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சில் மட்டும் நிதானத்தை செலுத்துங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் எப்படியாவது செய்து முடித்துவிட வேண்டுமென்று துணிச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் வந்து செல்லும்.
பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து திருப்தியும் அடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழலும் இருக்கும். ஆன்மீக சுற்றுலாக்களும் நீங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
அது மட்டும் இல்லை இன்று சிவன்ராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு நமக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது ஐதீகம். ஆகையால் நாமும் குபேரரையும் அண்ணாமலையாரையும் தரிசித்து கிரிவலம் செல்வோம்.செல்வத்தை பெற்றுவிடுவோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6: 30 மணிக்குள் குபேரரையும் நாம் வணங்கி திரு.அண்ணாமலையாரையும் மனதில் வழங்கினால் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். தயவு செய்து இதனை செய்வதற்கு நீங்கள் மறந்து விடாதீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவரிடம் பேசும்பொழுது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவு தாமதமாகத்தான் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். மற்றவர்கள் உங்களுக்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருப்பார்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மட்டும் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள்.
இந்த நாளில் குபேரருடன் நாமும் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு நமக்கு செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் இந்த நாளை நாம் கூடுமானவரை கிரிவலம் செல்வது சிறப்பு. முடிந்தால் கிரிவலம் சென்று வாருங்கள். உங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6: 30 மணிக்குள் குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசியுங்கள். செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும். உங்களை விட்டு விலகிச் சென்ற சிலர் விரும்பி வந்து சேரக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மனக்கவலை நீங்கும் நாளாகவும் இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும்.
உத்தியோகத்தில் இருப்பவரின் செயல் திறமையும் வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து மோதல்கள் விலகிச் செல்லும். இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் மிக முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள்.
குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள். இந்த நாளில் நாமும் குபேரரையும் திரு.அண்ணாமலையாரையும் தரிசித்து குபேரருடன் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கும் நமக்கு செல்வம் நிலைத்து நிற்கும். தயவுசெய்து இதை நாம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். அதுமட்டுமில்லாமல் கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரரையும் திரு.அண்ணாமலையாரையும் தரிசிப்போம். செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்வோம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்க மறுப்பார்கள். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாக கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை எந்த காரியம் முடியுமோ முடியாதோ என்ற மனக் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு காரியத்தைச் செய்யுங்கள். உங்களுடைய மனதிற்கு அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். ஏதேனும் ஒருவகையில் மன கவலை இருந்துக்கொண்டே இருக்கும். நட்பு ரீதியில் உங்களுக்கு சில வாக்குவாதங்கள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை பொறுமையை மட்டும் கையாளுங்கள். கூடுமானவரை உடல் நிலையில் கவனம் இருப்பது ரொம்ப நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறி உண்ணும்படி நேரலாம். எதிலும் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தைச் செய்யும் போதும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் குபேரருடன் நாமும் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு செல்வம் நிலைத்து நிற்கும். இன்றைய நாளை நாம் கிரிவலம் சென்று பயன்படுத்திக்கொள்வோம். கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். அப்படியும் முடியாதவர்கள் இன்று மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரரையும் திரு.அண்ணாமலையாரையும் மனதார வழிபட்டு உங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமண தடை விலகி செல்லும். இன்று துன்பம் வருவது போலிருக்கும் தவிர ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது பேச்சு உங்களுக்கு எதிர்ப்பை இன்று உண்டாக்கிக் கொடுக்கும். கூடுமானவரை யோசித்து பேசுங்கள் அது போதும். ஆன்மிக எண்ணங்கள் இன்று அதிகரிக்கும். புதிய யுக்திகளை கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றமான சூழ்நிலையும் அடையகூடும்.
தாங்கள் மேன்மை அடைந்திட புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வெளிநாடு வாய்ப்புகள் வரக்கூடும். வெளிநாட்டு வியாபாரமும் சிறப்பாக இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இன்று ஏற் படும். இன்று ஓரளவு மனம் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன்ராத்திரி என்பதால் குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த குபேர கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதாவது குபேரர் அவர்கள் திரு அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள். இன்று அவருடன் நாமும் கிரிவலம் சென்றால் ஏழு தலைமுறைக்கு செல்வம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம். கூடுமானவரை இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொண்டு கிரிவலம் சென்று வந்து நம்மளுடைய செல்வநிலையை வைத்துக்கொள்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6:30 மணிக்குள் குபேரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு உங்களுடைய செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகன பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். அதாவது செலவுகள் இன்று அதிகமாக தான் இருக்கும். அனாவசிய செலவுகள் மட்டும் செய்ய வேண்டாம். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்ககை வேண்டும்.
வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே ஓரளவு ஒற்றுமை இருக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் இல்லத்தில் நடக்கும். இன்று முக்கியமான பணியை மட்டும் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது போலவே இன்றைய நாள் சிவராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேர கிரிவலம் என்றால் குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லக்கூடிய நாள்.
இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்மளுடைய ஏழு தலைமுறைக்கும் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். ஆகையால் முடிந்த அளவிற்கு நாம் திரு . அண்ணாமலையாரையும் குபேரரையும் தரிசித்து கிரிவலம் செல்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து6: 30 மணிக்குள் குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பு. உங்களுடைய வாழ்க்கையில் செல்வ நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த வழிபாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். தயவுசெய்து கூடுமானவரை முயற்சி செய்யுங்கள் அது போதும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உதிரி வருமானங்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் எண்ணம் மேலோங்கும். மதிப்பும் மரியாதையும் உயரும்.. குடும்ப பெரியோர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பயணத்தால் பலன் உண்டாகும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரக்கூடும்.
பெண்களுக்கு மன கவலை கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் பெண்கள் இன்று கொஞ்சம் கடினமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். கூடுமானவரை மனதார தெய்வத்தை வணங்கி இன்று காரியத்தை எதிர்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவன்ராத்திரி குபேர கிரிவலம் என்று சொல்வார்கள்.
அதாவது குபேரர் திரு.அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்முடைய ஏழு தலைமுறைக்கும் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது ஐதீகம். ஆகையால் இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தி கிரிவலம் செல்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரரை வழிபட்டு சிவபெருமானையும் வழிபட்டு உங்களுடைய செல்வச் செழிப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும் நாளாக இருக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலைப்பொருட்கள் விற்பனைத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபம் இன்று கிடைக்கும். இன்று மற்றவர்கள் விஷயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள்.
இந்த கிரிவலம் செல்லும் நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்மளுடைய ஏழு தலைமுறைக்கும் செல்வ செழிப்பாக வாழலாம் என்பது ஐதீகம். ஆகையால் கூடுமானவரை நாம் அனைவரும் இன்று கிரிவலம் சென்று குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசித்து நம்முடைய செல்வச் செழிப்பை உயர்த்திக்கொள்ளலாம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரர் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழிலை விரிவு படுத்த தொகை வந்து சேரும் நாளாக இருக்கும். நாணயமும் நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கை நடைபெறும். விருந்தினர் வருகை இருக்கும். இடம் வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனையே கொடுக்கும். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். அடுத்தவரை நம்பி மட்டும் எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். அது போலவே கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். யாருக்கும் எந்தவிதமான ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
இன்று விளையாட்டில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க பெற்று மனமகிழும். மற்றவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கூடுமானவரை பயணங்களின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். முடிந்தால் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அது போலவே வாகனத்தில் செல்லும் பொழுதும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
அதுபோலவே இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு. அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லக்கூடிய நாள். இந்த நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்மளுடைய ஏழு தலைமுறைக்கு செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம். கூடுமானவரை நாம் இன்று கிரிவலம் செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30க்குள் குபேரர் வழிபாட்டையும் அண்ணாமலையாரையும் மனதார நினைத்து வழிபட்டு உங்களுடைய செல்வ நிலையை பெருக்கிக் கொள்வது மிகவும் சிறப்பு. தயவு செய்து இந்த வாய்ப்பை மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை