வலைப்பாடு மெசியா விளையாட்டு கழகம் அதிரடி செந்தமிழை வீழ்த்தி வெற்றிக் கிண்ணம் சுவீகரித்தது….!

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் மற்றும் வடமராட்சி கிழக்கு உப  உதை பந்தாட்ட லீக் ஆகிய வற்றின் அனுமதியுடன் வடமராட்சி கிழக்கு கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டு கழகம் நடாத்திய வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வு  நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டு கழக மைதானத்தில்  அதன் தலைவர் தலமையில் இடம் பெற்றது.

இதில் முதன்மை நிகழ்வாக பிரதம விருந்தினர்கள் விதையிலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மைதானத்திற்க்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்குகள் விழாவின் பிரதம விருந்தினரான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி சிறப்பு விருந்தினரான வடமராட்சி கிழக்கு பிரதேச உதவி பிரதேச செயலர் ப.தயானந்தன்,கௌரவ விருந்தினர்களான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சிவா ஜிவிந்தன் கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்திய ஒருங்கிணைப்பாளர் சித்த வைத்திய கலாநிதி வே.சிவநேசன் பருத்தித்துறை பிரதேச உதை பந்தாட்ட லீக் தலைவர் மா.நவநீதமணி வடமராட்சி கிழகதகு தலமை கிராம அலுவலர் வ.தவராசா ஆழியவளை கிராம சேவகர்.கி சுபகுமார் உடுத்துறை கிராம சேவகர் வி.சுபேஸ்குமார் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.அதனை தொடர்ந்து இறைவணக்கமும் தேசிய கொடி ஏற்றலும் இடம் பெற்றது.தேசிய கொடியினை நிகழ்வின் பிரதம விருந்தினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருமான கு.பிரபாகரமூர்த்தி ஏற்றி வைத்தனர்.கழக கொடியினை அதன் தலைவர் ஏற்றி வைத்தார்.அதனை தொடர்ந்து

இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய  வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம், கிளி பூநகரி வலைப்பாடு மெசியா விளையாட்டு கழகம். ஆகிய கழகங்களிற்க்கு இடையிலான இறுதிப் போட்டி இடம் பெற்றது.இறுதிப் போட்டியை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மற்றும் விருந்தினர்கள் கைகலாகு கொடுத்து ஆரம்பித்து வைத்தனர்.மிகவும் விறுவிறுப்பாகத் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் கிளி பூனகரி வலைப்பாடு மெசியா விளையாட்டு கழகம் ஆறு கொல்களையும் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம் ஒரு கோல்களையும் போட்ட நிலையில் ஐந்து மெசியா பூநகரி  மெசியா விளையாட்டு கழகம் ஐ ்து கோல்கலால் அபார வெற்றி பெற்றது.இதில் கருத்துக்களையும் வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள் பரிசில்களையும் பிரதம சிறப்பு விருந்தினர்கள் வழக்கி வைத்தனர்.