மாவீரா் நாள் நினைவேந்தலை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூரவேண்டும் எம் கே சிவாஜிலிங்கம்.

மாவீரா் நாள் நினைவேந்தலை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூரவேண்டும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களை , நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது அவர் எனவும் கூறியுள்ளாா்.
ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னா் மாவீரா் நாள் நினை வேந்தல் தொடா்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றதாக குறிப்பிட்ட அவர் அந்த பதற்றம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையில் ஜே.வி.பி புரட்சிகளில் உயிாிழந்தவா்களுக்கு காா்த்திகை வீரா்கள் தினம் என்ற ஒரு நாளில் நினைவுகூரல் நடாத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் தமிழா்கள் எங்களுடைய மாவீரா்களை நினைவுகூருவதில்
என்ன தவறு? எனவும் சிவஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே எந்தவொரு தடைவிதிக்கப்படாலும் மாவீரா்களை நினைவுகூருவதிலிருந்த மக்கள் தவறக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.