பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் மே 2

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் மே 2 ஆம் திகதி நடக்கக் கூடுமென அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகரமாக அறியமுடிகின்றது.
இப்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அதிகாரம் வருகிறது.அதன்படி பாராளுமன்றத்தை கலைக்கும் அவர் உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வோர் எனது தெரிகிறது.
ஏற்கனவே பாராளுமன்றக் கலைப்பு பற்றி ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் அதன்படி அக்காலப்பகுதிக்குள் கலைக்கப்பட்டால் மே இரண்டாம் திகதி மட்டில் தேர்தல் நடக்குமென தேர்தல் திணைக்கள மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் அடுத்த பாராளுமன்ற அமர்வின் பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்படலாமென சொல்லப்பட்டாலும் அது குறித்து இறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.