கடலில் வீசிய கடும் புயலால் தென்னிலங்கை மீனவரின் பலநாள் கலம் முற்று முழுதாக சேதம்…..!

மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த பலநாள் தங்கி ஆழ் கடற்றொழிலில் ஈடுபடும் படகு ஒன்று இயந்திர கோழாறு காரணமாக பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலயில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக காற்றினால் அடித்துச் செல்லப்பபட்டு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் 5 பேருடன் பிற்பகல் ஐந்து மணியளவில்  கரை ஒதுங்கியுள்ளது. மாத்தறை மாவட்டத்தை சேரந்த. படபெந்தி மதுமகே பிரியந்தலால் என்பவருக்கு சொந்தமான பலநாள் தங்கி தொழில் செய்யும் ராங் போட்டே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது. காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட குறித்த படகு கரையில் உள்ள கடற் கற் பாறைகளில் மோதி மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளது.இது தொடர்பில் குறித்த படகின் உரிமையாளர் பருத்தித்துறை காவல்துறை மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றிற்க்கு முறையிட்டுள்ளனர்.குறித்த படகில் சம்பவம் இடம் பெற்றபோது 5 மீனவர்கள் படகில் இருந்துள்ளனர் சுமார் ஐம்பது இலட்சத்திற்க்கு மேற்பட்ட சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

,நாகர்கோவில்