கடமைகளை பொறுப்பெடுத்த டக்ளஸ் தேவானந்தா…!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுக் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.கொழும்பு மாளியாவத்தையிலல் அமைந்துள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் குறித்த அமைச்சை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றிருந்தார்.
முன்பதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.