முதல் விசாரணை ராஜித மீது?

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது விசாரணை நடத்தப்படவுள்ளது.பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
அரச சொத்துக்களை முறிக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் விசாரணைக்கு அழைக்கப்படும் முதல் முன்னாள் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.