தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவாலாக புதிய கூட்டணி…..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவாலாக பரந்தளவிலான மக்கள் செல்வாக்குள்ள அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் வட,கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அறிவித்துள்ளார்.புதிய கூட்டணியின் பெயர் தேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு என இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த புதிய கூட்டணி, அடுத்த நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கான பேச்சு வர்த்தைகள் ஈபிடிபி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ் முற்போக்குக் கட்சி, சிறி ரெலோ ஆகிய தரப்புக்களுடன் நடப்பதாகவும் வரதர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான பங்கை ஆற்றவில்லையெனவும், வெங்காயத்தனமான விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நிச்சயமாக தீர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.