சிறப்பு மருத்துவ நிபுணரான சீதா அரம்பேபொல அவர்கள் மேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
சற்றுமுன் புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
காது, மூக்கு மற்றும் தொண்டை ஆகியவற்றின் சிறப்பு மருத்துவ நிபுணரான சீதா அரம்பேபொல அவர்கள் மேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியின் நியமனத்தில் வைத்திய நிபுணரின் சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக பலராலும் பாராட்டப்படுகிறது.
அதனடிப்படையில், ஆறுமாகாணங்களுக்கான ஆளுநர்கள் மட்டுமே முதல் சுற்றில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.