கிழக்கு மாகாண ஆளுனராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண…..!

கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளைகிழக்கு ஆளுனர் பதவியை பெற, முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரி சரத் வீரசேகர கடுமையான பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார்.
எனினும், அவரை ஆளுனராக நியமிப்பதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்க்ஷ தீர்மானித்திருந்தார்.
அத்துடன் படைத்துறை சார்ந்தவர்களை ஆளுனர் பதவிக்கு நியமிப்பதால் தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படுமென்பதால், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.