அமைச்சு பணிகளிற்கு விடைகொடுத்தார் அகிலவிராஜ் காரியவசம்….!

இதுவரை காலமும் கல்வி அமைச்சராக இருந்த அகிலவிராஜ் காரியவசம் தனது பதவியிலிருந்து நீங்கியுள்ளார்.இந்நிலையில் கல்வி அமைச்சு பணிகளிற்கு தற்காலிகமாக விடைகொடுத்துள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று கல்வியமைச்சிற்கு சென்ற அகிலவிராஜ் காரியவசம், உத்தியோகத்தர்களிற்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து விடைபெற்று சென்றுள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவானதை அடுத்து புதிய அமைச்சர்கள் அமைச்சுக்களிற்கு நியமிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.