வடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை…..!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று புதன்கிழமை (20) காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை, பாரதிதாசன் வீதி, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித் துறையின் ஒரு பகுதி, தொம்பை வீதி, உடுவில் மேலதிக அரசாங்க அதிபர் அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.