ரணில் பதவி இராஜினாமா முடிவை அறிவிக்கவுள்ளார்

பிரதமர் ரணில் இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தனது இராஜினாமா முடிவை அறிவிக்கவுள்ளார்.
இதனையடுத்து நாளை 16 பேர் கொண்ட அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யும். பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை கொண்ட அந்த அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நால்வருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.
அதேசமயம் டக்ளஸ் தேவானந்தா , ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.
இந்த இடைக்கால அமைச்சரவை சில காலங்களுக்கென்றும் உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றையும் பிரதமர் ரணில் ஆற்றவுள்ளார்.