புதிய ஜனா­திபதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பார்-சக்திவேல் அடிகளார்

தமிழ், – முஸ்லிம் மக்களை தம்முடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ அழைப்பு விடுத்தமை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த அரசியல் கைதி­களின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வண. பிதா சக்திவேல் புதிய ஜனா­திபதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜ பக்ஷ பதவியேற்றதையடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் நிலைப்­பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் இது தொட ர்பில் மேலும் தெரி­விக்கையில்,ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தமிழ் மக்களையும் தன்னுடன் ஒன்றி­ணயுமாறு அழைப்பு விடுத்திருக்­கின்றார். இந்நிலை யில் தமிழ் அர­சியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி க­ளான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­திரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் வேண்டுகோள்­களை முன் வைத்திருந்தோம்.இருப்பினும் தகுந்த தீர்வு எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டின் முற்ப­குதியில் அரசியல் கைதியொருவர் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆகவே, ஜனாதிபதியின் நிறைவேற்று அதி­காரத்தை பயன்படுத்தி இத்தகைய கைதிகளை விடுவிப்பதற்கு நடவ­டிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தெளிவாக தெரி­கின்றது. அந்தவகையில் புதிய ஜனா­திபதி தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களை விடுவிப்பதற்கான நடவ­டிக்கைகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. தமிழ் மக்கள் அவருடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமாயின் அரசியல் ரீதியான அவர்களுடைய பிரச்சி னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம் பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அந்தவகையில் புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப் பார் என நம்புகின்றோம்.