பாதுகாப்பு செலவீனங்களை குறைத்தார் கோட்டபய

ஜனாதிபதியின் வாகனம் செல்லும்போது எந்தவொரு வீதிகளையோ மூடக் கூடாதெனவும் ஜனாதிபதியின் வாகனத் தொடரணியில் பாதுகாப்பு வாகனங்கள் இரண்டு அல்லது மூன்றுக்கு மேலே செல்லக் கூடாதெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி பணிக்குழாமில் உள்ள ஊழியர்கள் 2500 பேரிலிருந்து 250 பேர் வரை குறைக்கப்படவுள்ளனர்.அத்துடன் ஊழியர்களின் வாகன மற்றும் இதர சலுகைகளிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை விட போதைப்பொருட்கள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்தும் பொறுப்பு இனி இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.நேற்று இரா சவேந்திர சில்வாவை சந்தித்தபோது இதுபற்றி ஜனாதிபதி பேச்சு நடத்தியதாக அறியமுடிந்தது.