பதவியிலிருந்து இராஜினாமா செய்தார் ரணில்

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க இன்று இராஜினாமா செய்ததையடுத்து நாளை புதிய அரசமைக்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழைப்பு விடுப்பார்.
புதிய அமைச்சரவை பட்டியல் நாளை இறுதிசெய்யப்பட்டவுடன் அது ஜனாதிபதிக்கு அனுப்பப்படுமென மஹிந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை தனது இராஜினாமா குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கான பெரும்பான்மை பலம் இருந்தாலும் ஜனநாயக மாண்புகளை மதித்து மக்கள் தீர்ப்பை ஏற்று தாம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
”நான் நேற்று ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேச்சு நடத்தினேன்.அதனடிப்படையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்.” என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.(அறிக்கை இணைப்பு )
இதேவேளை புதிய அரசு அமைந்தவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உடனடி தேர்தலுக்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அப்படி கலைக்கப்பட்டால் இந்த தற்காலிக அரசு பாராளுமன்ற தேர்தல்வரை இயங்கும்.