டெங்கு காச்சலினால் பாடசாலை மணவி உயிரிழப்பு சுண்ணகத்தில் சோகம்!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்தார்.

டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

இறப்பு விசாரணைகளை மல்லாகம் பிரதேசத்திற்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மோகன் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது