சிங்களப் பௌத்த ஜனாதி­பதி வேட்பாளருக்கே வாக்களித்தனர்-ராதாகிருஷ்ணன்.

தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இன­வாதிகள் அல்ல. அவர்கள் வாக்களித்­ததும் ஒரு சிங்களப் பௌத்த ஜனாதி­பதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவா­திகளாக இருந்திருந்தால் நிச்சய­மாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்­துக்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லா­வுக்கும் வாக்களித்திருக்க வேண்டும். தேர்தல் தினத்தன்றும் தேர்தல் முடிவடைந்த பின்பும் தமி­ழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்­ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக புதிய ஜனாதிபதியின் செயற்பாடுக­ளுக்கு குந்தகம் ஏற்படலாம். எனவே இதற்கான உரிய நடவடிக்கைகள் உடன­டியாக எடுக்கப்பட வேண்டும். அதே நேரம் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்­படுத்துங்கள் என மலையக மக்கள் முன்­னணியின் தலைவரும் தமிழ் முற்­போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்­கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ­விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்­பின்போதே இவ்வாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ள­தாவது,
தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இன­வாதிகள் அல்ல. அவர்கள் வாக்களித்­ததும் ஒரு சிங்கள பௌத்த ஜனாதி­பதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவா­திகளாக இருந்திருந்தால் நிச்சய­மாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்­திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லா­விற்கும் வாக்களித்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் அளித்த அனைத்து வாக்குகளும் பௌத்த சிங்கள வேட்­பாளரான சஜித் பிரேமதாசவிற்கே. இதனை பெரும்பான்மை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்­களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் ­மீது பற்றுள்ளவர்கள். அவர்களும் இந்­நாட்டை நேசிப் பவர்கள். தேர்தல் தினத்­தன்று தெரணியகலை நூரி தோட்­டத்தில் எமது மக்கள் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதியன்று யட்டியாந்தோட்டை கணேபொல மேல் பிரிவிலும் தாக்குதல் சம்பவ­மொன்று இடம்பெற்றுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்­கிறோம். இவ்வாறான செயற்பா­டுகள் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமே தவிர அவர் மீது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தப் போவதில்லை. நடந்து முடிந்துள்ள தேர்தலில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்,முஸ்லிம் மக்களின் மனதை வென்றெடுப்பதற்கான நடவடிக்கை­களை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து நடைபெறவுள்ள பாராளு­மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்­களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்­குகளைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் செயற்பாடுகள் முன்னெ­டுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் நேரடியாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்க மாட் டார்கள் என நான் நினைக்கின்றேன். ஆனாலும் தங்களுடைய ஆதரவாளர்களை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறு திப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.