கோத்தபாயவின் நிகழ்வில் பங்கேற்ற மைத்திரி…..!

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தனது கடமைகளை இன்று பொறுப்பேற்ருக்கொண்டுள்ளார்.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.