6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்

கடல்சார் போர் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச சட்டங்கள் பற்றி விவாதிக்கபடும் 6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‍

நாளை மறுதினம் புதன்கிழமை வரை இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கை கடற்படை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரே ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவித்து கடற்படை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக சிங்கபூரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தரங்கு தாய்லாந்து , இந்தோனேசியா,மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நடைப்பெற்றுள்ளதுடன் , முதல் தடவையாக இம்முறை இந்நாட்டில் இடம்பெறவுள்ளது.

இதன்போது வங்காளம் , கம்போடியா, சீனா,பீஜி, இந்தியா,இந்தோனேசியா,ஜப்பான் , மலேசியா, மாலைத்தீவு, மியன்மார்,நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கபூர், தாய்லாந்து, கிழக்கு திமோர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 26 கடற்படை அதிகாரிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.