மாவீரர் நாளினை அனுஷ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை…எம் கே.சிவாஜிலிங்கம்

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.
இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஷ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஷ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.
என்றார் சிவாஜிலிங்கம்