விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடாத்தப்படும்-ரணில்

பாராளுமன்ற தேர்தலொன்று குறித்து விரைவில் சபாநாயகர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பில் மஹிந்த தரப்பு விடுத்த வேண்டுகோளையடுத்து ரணிலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.