ஆதரவாளர்களை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ச!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ச ,மிரிஹானையில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக ஆதரவாளர்களை சந்தித்தார்.

இதேவேளை இன்று மாலை அலரி மாளிகையில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டவுள்ள பிரதமர் ரணில் , அதில் கலந்துகொள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு ஆட்சியமைக்க வழிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்க இடமளிப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

மங்கள – அஜித் பெரேரா ராஜினாமா..!

நிதியமைச்சர் மங்கள சமரவீர , இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா ஆகியோர் தமது பதவிகளை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளனர்