தெரணியகல நூரி தோட்டத்தில் தமிழர்கள் மீது வாள்வெட்டு

தெரணியகல நூரி தோட்டத்தில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதைமீறி தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த நிலையிலேயே சிலர் அங்குள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, பதுளை – ஹப்புத்தளை பகுதியிலும் வெட்டு காயங்களுக்கு இலக்கான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல்வாதியொருவக்கும், எதிர்தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவிக்கின்றது.