சமூகவவைத்தளங்களில் பரவும் போலிசெய்திகளை நம்பவேண்டாம்-மஹிந்த தேசப்பிரிய!

தற்போது சமூக வலைத்தளங்களில் உலாவும் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமானவை அல்ல. அவற்றை நம்ப வேண்டியதில்லையென தெரிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.
தபால்மூல வாக்குமுடிவுகள் என குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்படும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.