இலக்கத்தகடு அற்றவாகனத்தில் வாக்குசாவடிக்குள் நுழையமுயன்ற மர்ம நபர்கள்!

இலக்க தகடு இல்லாத பெஜிரோ ஜீப் வண்டியில் சென்ற சிலர் கண்டி, நாவலப்பிட்டியவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றுக்குள் பலவந்தமாக செல்ல முயற்சித்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குள் இவர்கள் பலவந்தமாக நுழைய முயற்சித்துள்ளனர் எனவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.
அனுராதபுரம் தந்திரிமலை பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் பயணித்த பேருந்துகள் மீது அடையாளந்தெரியாத நபர்கள் இன்று காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் பேருந்துகள் செல்வதை தடுக்க வீதியில் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிராக தேர்தல் தொடர்பான 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரு முறைப்பாடும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.