இன்றைய ராசி பலன் 16/12/2019 சனிக்கிழமை……!

மேஷம்
முக்கிய முடிவுகளை எடுக்க திணறுவீர்கள். அமைதியாக அனைத்திலிருந்தும் ஒதுங்கியிருங்க விரும்புவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பால் மனம் மகிழ்வீர்கள்.
ரிஷபம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால், புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிய விஷயங்களை காட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
மாற்றுக்கருத்து உடையவர்களிடமிருந்து விலகி இருத்தல் நல்லது. பிரியமானவர்களின் எதிர்கருத்துகளும் தங்களுக்கு பாதகமாக தோன்றும். மனசஞ்சலம் அதிகரிக்கும் நாள்.
கடகம்
தடைபட்டிருந்த காரியங்கள் விரைந்து முடிக்க முற்படுவீர்கள். கொண்ட கொள்கையில் உறுதியாக ரஇருந்து பல அபரிமிதமான காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்
புதிய பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். போட்டி, பந்தயங்கள் போன்ற கேளிக்கை நிகழ்வுகளில் மனம் செல்லும். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
கன்னி
பழைய செயல்பாடுகளிலிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். பிரியமானவர்களின் செயல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாய் அமையும். எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்தல் நல்லது.
துலாம்
புத்துணர்வுடன் செயல்படும் நாள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
விருச்சிகம்
நீண்டகாலமாக மனதை வருத்திவந்த பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
தனுசு
திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். எதையும் தாங்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பால், மனம் மகிழ்வீர்கள்.
மகரம்
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நலம். உங்களின் அனுபவ செயல்களால், நன்மதிப்பு பெறுவீர்கள். சிறுதொலைவு பயணம் நன்மையை தரும். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
கும்பம்
நிதி விவகாரங்களில் பீதி அடையாமல் இருக்க விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம். தக்க நேரத்தில் மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள்.
மீனம்
உங்கள் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் சிலரின் செயல்பாடுகள் இருக்கும். மற்றவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பதை தவிருங்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.