இதுவரை வாக்குசாவடிகளில் செலுத்தப்பட்ட வாக்கு வீதம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. தேசிய ரீதியில் 80 வீதத்திற்கு மேல் வாக்களிப்பு நடந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.
இன்று பிற்பகல் 3.30 வரை வாக்குப்பதிவு கிடைத்த வீதம் பின்வருமாறு –
இரத்தணபுரி- 79%, ஹம்பாந்தோட்ட- 75%, மாத்தறை-72%, காலி- 72%, கண்டி- 75%, கழுத்துறை- 75%, அம்பாறை- 70%, பொலநறுவ- 77%, நுவரெலியா- 75%, வவுனியா- 72%, கம்பகா- 75%,கொழும்பு- 70%
திருகோணமலை- 73%, குருநாகல்- 70%, புத்தளம்- 72%, மாத்தளை- 75%, மொனராகல- 75%,கேகாலை- 75%
அனுராதபுரம்- 70%, மன்னா- 68%, முல்லைத்தீவு- 72%, யாழ்பாணம்- 64%, கிளிநெச்சி- 68%