இந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் – சீன தூதுவர் ஷெங் யுவான்

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் – கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார்.

 

இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை – சீன திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பு இன்று தாமரை கோபுரத்தில் இடம்பெற்றது.

இதன்போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.