தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு என ஆசிரியர் உட்பட ஐவர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளர் என மலேசியாவில் ஆசிரியர் உட்பட , மலேசியா மாநில அரசுத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருள்களை வைத்திருந்தார்கள் என்றும் பண உதவி செய்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.