மஹிந்தவிடம் கெட்டவார்த்தைகளில் திட்டு வாங்கிய முக்கியஸ்தர்?

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் முக்கிய பிரபலம் ஒருவரை கெட்ட வார்த்தைகளினால் கடுமையாக திட்டியுள்ளதாக தெற்கு இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குருணாகல் வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்டீன் சாபீ தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையும் தொடர்புபடுத்தி தம்மை நெருக்கடிக்குள் சிக்க வைத்ததாக மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரை தூற்றியுள்ளார்.
அண்மையில் மஹிந்த ராஜபக்சவை, ரதன தேரர் சந்தித்த போது இவ்வாறு கடுமையான தூற்றியுள்ளார்.
கெட்ட வார்தைகளினாலேயே மஹிந்த, ரதன தேரரை திட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“நான் சொன்னேன் தானே இவ்வாறான எருமைமாட்டு வேலைகளை செய்ய வேண்டாம் என்று, கேட்கவில்லை தானே? இப்போது வீதியில் இறங்கி நடக்க முடியாது” என மஹிந்த கூறியுள்ளார்.
“ஜொனி உள்ளிட்டவர்களும் இந்த விடயத்தை தொடங்கிய போது நான் அவர்களை கஸ்டப்பட்டு தடுத்து நிறுத்தினேன், எனினும் அந்த தாய்மாருக்கு பணம் வழங்கிய விடயம் அம்பலமாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
“இனவாதத்தை வெளியே எடுக்க வேண்டிய நேரங்கள் உள்ளது, எல்லா நேரங்களிலும் இனவாத அரசியலை கொண்டு சென்றால் அவ்வளவுதான்” என குறிப்பிட்டுள்ளார்.
“இந்த எருமைமாட்டு பௌத்த பிக்குகள் எல்லா நேரங்களிலும் இதனையே செய்கின்றார்கள். எல்லா விடயங்களிலும் தலையீடு செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களின் முட்டாள்தனத்தினால் எனக்குத்தான் பிரச்சினை” என குறிப்பிட்டுள்ளார்.
“எனவே தெரியாத …….. வேலைகளை செய்ய வேண்டாம், புண்ணியம் உண்டாகும் தெரிந்த ………. செய்து கொண்டு ஓராமாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் கடுமையான தூற்றுதலுக்கு மத்தியில் ரதன தேரர் அமைதி பேணியதாக குறித்த சிங்கள இணைய தளம் தெரிவித்துள்ளது.