நேற்று  நடந்த துப்பாக்கி சூடு..! 3 பொலிஸ் குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை..

கொழும்பு- கொஹிவலை பகுதியில்  நேற்று  அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடா்பில் 3 விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து விசாரணை நடாத்தப்படுவதாக பொலி ஸாா் கூறியுள்ளனா்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர கூறுகையில், நுகேகொடை பொலிஸ் அத்தியட்சரின் கீழும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் ஊடாகவும்
விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொஹுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் 3 விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளளனர்.