நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்கள் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்களை அறிமுகம் செய்தது.

நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன்கள் அறிமுகம்
நோக்கியா 220 4ஜி

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 105 மொபைல் போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் நோக்கியா 220 4ஜி மொபைல் போன் 2014 ஆம் ஆண்டு அறிமுகமான நோக்கியா 220 மாடலின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய நோக்கியா 105 நான்காவது முறையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 220 4ஜி மொபைலில் 2.4 இன்ச் QQVGA கலர் ஸ்கிரீன், பாலிகார்போனேட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, ஃபேஸ்புக், ட்விட்டர், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ மற்றும் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 220 4ஜி சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச் QQVGA கலர் டிஸ்ப்ளே
– ஃபீச்சர் ஒ.எஸ்.
– 16 எம்.பி. ரேம்
– 24 எம்.பி. மெமரி
– வி.ஜி.ஏ. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
– எம்.பி.3 பிளேயர்
– GSM/GPRS 900/1800 (EU); LTE1 Cat-1, 10Mbps DL / 5Mbps UL
– 4ஜி மற்றும் 2ஜி
– ப்ளூடூத் 4.2, மைக்ரோ யு.எஸ்.பி.
– 1200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 105 மொபைல் போன் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 1.77 இன்ச் QQVGA கலர் ஸ்கிரீன், எல்.இ.டி. டார்ச் லைட்கள், இன்பில்ட் எஃப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 105 2019

நோக்கியா 105 (2019) சிறப்பம்சங்கள்:

– 1.77 இன்ச் 160×120 பிக்சல் QQVGA கலர் டிஸ்ப்ளே
– நோக்கியா சீரிஸ் 30 பிளஸ் மென்பொருள்
– 4 எம்.பி. ரேம்
– 4 எம்.பி. ரோம்
– GSM 900/1800 (EU); 850/1900 (US)
– எஃப்.எம். பேடியோ
– டார்ச் லைட்
– சிங்கிள் / டூயல் சிம்
– மைக்ரோ யு.எஸ்.பி. 2.0
– 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 220 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 39 யூரோ  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 105 (2019) மாடல் புளு, பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 13 யூரோ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.