நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித், வித்யாபாலன்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

சமீபத்தில் தீ முகம் தான் என்ற பாடலை வெளியிட்டார்கள். தற்போது ‘அகலாதே…’ என்ற பாடலை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். மேலும் இது ரசிகர்களை மயக்கும் பாடலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.