சிக்கினார் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி! விசாரணை தீவிரம்..

முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 10  ஏக்கர்     அளவிலான காட்டை அழித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜ௧ குறி த்து விசாரணை நடாத்த முல்லைத்தீவு மாவட்ட செ யலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குள் சுமார் 10 ஏக்கர் காட்டை அழித்து விவசாய நிலமாக மாற்றியதாக அண்மையில் ஊடகங்கள் சுட்டிக்கா ட்டியதுடன் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த நாடா ளுமன்ற உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட செ யலகம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக குறித்த விடயம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சம்ப்பிக்கும் படி கேட்கப்பட்டுள்ளது.