உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்துவதாக முள்ளிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தில் ஏற்றிச்சென்ற 12 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.